அரசாங்கம் அநீதியான கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்
குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் சட்டத்திற்கு புறம்பாக சென்று நினைத்தாற்போது அரசாங்கம் செய்யும் அநீதியான கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தனது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் ஏகாதிபத்திய, சர்வாதிகார பயணத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்நோக்கி வரும்.
பொலிஸார் சந்தேக நபர்களை கொலை செய்யும் போது அரசு அநீதி அரசாளும் பாசிசவாத அரசாக மாறும்.
இப்படியான கொலைகள் மூலம் சந்தேக நபருடன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் முதன் நிலை குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முடியும்.
அது மாத்திரமல்ல சட்டத்தின் ஆதிபத்தியம், சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையும் இல்லாமல் போகும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
