நாட்டை குழப்ப நிலைக்கு தள்ளி அராஜக நிலைக்கு இட்டுச்சென்றுள்ள அரசாங்கம்
அரசாங்கத்தின் ஆடைகள் களையப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அரசாங்கம் போலி வாக்குறுதிகளை வழங்கி அவற்றை நிறைவேற்ற முடியாது கோவிட் பிரச்சினையிலும் தோல்வியடைந்து, நிர்வாகத்திலும் தோல்வியடைந்துள்ளது.
ஒட்டு மொத்த நாட்டையும் குழப்ப நிலைக்கு தள்ளி, நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
இதனால் அரசாங்கம் மற்றும் அதற்கு ஆதரவளித்தவர்கள் ஆடையின்றி நிர்வாணமாகவே இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு உள்ளாடைகள் பற்றி பிரச்சினை கிடையாது.
எனினும் நாட்டு மக்களுக்கு அது தொடர்பில் பிரச்சினை உண்டு என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியினால் இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகளையும் ஆடம்பர பண்டமாக அறிவிக்கப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam