புத்தாண்டு காலத்தில் சலுகை விலையில் பொருட்கள்! அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை தற்போதைய சந்தை விலைக்குக் குறைவான சலுகை விலையில் வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, அரிசி, பால் மா, சீனி மற்றும் தேயிலை அடங்கிய இந்த லங்கா சதொச நிவாரணப் பொதி 1950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த 5 பொருட்களின் கொள்முதல் விலையை விட நுகர்வோர் 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளர்து.
இந்தப் புத்தாண்டு நிவாரணப் பொதி நாளை முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிவாரணப் பொதியில்,
5 கிலோ நாட்டு அரிசி
05 கிலோ சம்பா அரிசி
400 கிராம் பால் மா
1 கிலோ சிவப்பு சீனி
100 கிராம் தேயிலை
ஆகியவை உள்ளடங்குகின்றன.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
