கொரோனா தனிப்படுத்தல் விடுதியிலிருந்து தப்பிச் சென்ற பெண்! லாவகமாக பிடித்த ஊழியர்கள்
வெல்லவாய ஆதார வைத்தியசாலையின் கொரோனா நோயாளர்கள் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்து பெண் ஒருவர் இன்று காலை விடுதியில் இருந்து தப்பியுள்ளார்.
கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அந்த பெண், வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்கள் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு பி.சி.ஆர் சோதனைகள் பெறும் வரை அங்கேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்த அறிக்கைகள் இன்று பெறப்படவிருந்தன, முடிவுகளைப் பெறுவதற்கு முன்னர் அந்த பெண் விடுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்தன.
அந்தப் பெண் வைத்தியசாலையின் முன் வாயிலிலிருந்து குதித்து பிரதான சாலைக்குச் சென்று, பின்னர் சாலையின் குறுக்கே ஓடியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்தப் பெண்ணை பிடித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த பெண் 31 வயதான குருநாகல் பகுதியில் வசிப்பவர் எனவும், அவரது பி.சி.ஆர் முடிவுகளைப் பெறவுள்ளதாக வெல்லவாய வைத்தியசாலையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.