நான்கு நாட்களின் பின் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி! - நடந்தது என்ன?
நீர்கொழும்பு – துன்கல்பிட்டிய கடலில் காணாமல் போன சிறுமி சிலாபம் இரணவில கடற்கரை பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு, துன்கல்பிட்டிய, அளுத்குருவ மீனவ கிராமத்தைச் சேர்ந்த தமாஷா ரொஷாலி எனும் இரண்டரை வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 18ம் திகதி குறித்த சிறுமியின் பெற்றோர்கள் கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்த போது, சிறுமி கடலில் விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த சிறுமி கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து, அங்கிருந்த மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பொலிஸார், கடற்படையினரின் உதவியுடன் கடலில் காணாமல் போன சிறுமியை தேடினர்.
எனினும், சிறுமி நான்கு நாட்களின் பின் இன்றைய தினம் சிலாபம் இரணவில கடற்கரை பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை அடையாளம் காட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan