தொடர்ந்து வெடித்து கொண்டிருந்த எரிவாயு அடுப்பு! விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை உயரப்புலம் பகுதியில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மாலை 5.45 மணியளவில் வெடிக்க ஆரம்பித்த அடுப்பு 7.30 மணி வரையும் வெடித்துக்கொண்டிருந்ததாகவும் அதன்பின்னர் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்தித்திற்கு வந்து வெடிப்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமைகளை பார்வையிட்டு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.