கனடாவில் வீடு புகுந்து பெண் ஒருவரை கடத்தி சென்ற ஆபத்தான மர்ம கும்பல்
கனடாவில் வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் புகுந்த கும்பலொன்று பெண் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோ பிராந்திய பொலிஸார் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். இரவு சுமார் 8.30 மணியளவில் டிரெயில்வுட் பகுதியில் இருந்து உதவி கோரி அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிஸாரிடம், மூவர் கும்பல் ஒன்று வீடு புகுந்து 37 வயதுடைய பெண் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் பெயர் Elnaz Hajtamiri எனவும், அந்த மூவர் கும்பல் வெள்ளை நிற SUVல் மாயமானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கும்பலிடம் ஆயுதம் இருக்கலாம் எனவும் அவர்கள் ஆபத்தானவர்களாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால்பெண்ணின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam