வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட கும்பல்! பிரதான சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாவடியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடுகளுக்குள் புகுந்து வன்முறை

அண்மையில் மானிப்பாயில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருட்களை உடைத்து சேதப்படுத்தியமை மற்றும் கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் குறித்த இளைஞனை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தொடர்ச்சியாக தேடி வந்துள்ளனர்.
குறித்த சந்தேக நபருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய ஒருவர் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட இருவர் என மூவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொருட்கள் மீட்பு

இதற்கமைய அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐவர் தேடப்பட்டு வருவதாகவும்
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam