நாட்டின் எதிர்காலத்தை கடவுளிடம் பாரப்படுத்தி, பதவி விலகிய முக்கியஸ்தர்! - வெளியான தகவல் (Video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டை சிறப்பாக நடத்திச்செல்லப்போவதாக கூறும்போது, ஜனாதிபதியின் செயலாளராக இருந்த பி.பீ ஜயசுந்தர, நாட்டு மக்களின் எதிர்காலம் கடவுளுக்கே பொறுப்பு என்று கூறியதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“கோட்டாபய ராஜபக்சவின் அடுத்த மூன்று ஆண்டுகளை கடவுளிடம் பாரப்படுத்தி விட்டே, பி.பீ ஜயசுந்தர சென்றுள்ளதாக விஜயசிறி குறிப்பிட்டார். கடந்த இரண்டு வருடங்களில் தாம் தோல்வியடைந்து விட்டதாக கூறும் ஜனாதிபதி, அடுத்து மூன்று ஆண்டுகளுக்காக நுால் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையிலேயே பி.பீ ஜயசுந்தரவின் கருத்து வெளியாகியுள்ளதாக விஜயசிறி தெரிவித்தார். இதேவேளை, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார திட்டங்களுக்கு உதவுவதாக சமிந்த விஜயசிறி கூறியபோது, அரசாங்கத்தரப்பினர், சஜித் பிரேமதாசவுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதாக கூறினர்.
எனினும் அந்த தடுப்பூசி மெதமுலன்னையில் இருந்து எடுத்து வந்து செலுத்தப்படவில்லை என்று” சமிந்த விஜயசிறி தெரிவித்தார்.
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam