மோசடிக்காரர் நிதியமைச்சர்! பசிலிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய இளைஞர்
உங்களிடம் நான் கேட்கின்றேன், நீங்கள் வந்ததிலிருந்து இதுவரை என்ன செய்தீர்கள் என பசிலிடம் இளைஞர் ஒருவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையில் கோபமடைந்த இளைஞன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மேற்கூறியவாறு தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் நேரடியாகவே சொல்கின்றேன். உங்களுக்கு எம்மத்தியில் எந்தவொரு கௌரவமும் இல்லை, ஆகவே இந்த கொடிகளைக் கட்டியது, இந்த வரவேற்பு ஏற்பாடுகள் எல்லாம் ஒழுங்கு செய்தது இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் என நீங்கள் நினைத்துவிட வேண்டாம்.
எமக்கு தெரிந்தளவில் சுனாமியிலிருந்து நிறைய விடயங்களை மிகவும் நுணுக்கமான முறையில் கொள்ளையடித்த அமெரிக்க பிரஜாவுரிமை உடைய அமெரிக்கர் தான் நீங்கள். நிறைய விடயங்களைச் சகித்துக்கொண்டுதான் பேசுகின்றேன்.
எமது நாட்டில் காடழிப்பு இடம்பெற்றபோது நாம் பொறுமையாக இருந்தோம். எமது நாட்டில் வளங்கள் காணாமல் போனபோது நாம் பொறுமையாக இருந்தோம். எமது வரலாற்றில் எமக்கான நிறைய விடயங்கள் அழிக்கப்பட்ட போது நாம் பொறுமையாக இருந்தோம்.
எமக்கு ஏதாவது செய்வாரென்றுதான் நாங்கள் கோட்டாபயவிற்கு வாக்குகளை வழங்கினோம். நாங்கள் அதைதான் எதிர்பார்த்தோம். ஆனால் நீங்கள் முழுக்குடும்பமாக சேர்ந்து இந்த நாட்டை நாசம் செய்து விட்டீர்கள்.
இந்த நாட்டில் மாணவர்களின் கல்விக்காக இதுவரை நீங்கள் எதனையும் செய்யவில்லை. பசில் ,உங்களிடம் நான் கேட்கின்றேன் நீங்கள் வந்ததிலிருந்து இதுவரை என்ன செய்தீர்கள். எங்களுக்காக நீங்கள் எதையுமே செய்ததில்லை. மிகவும் வேதனையுடனேயே பேசுகின்றேன்.
நீங்கள் பாதையில் செல்லும் போது உங்கள் வாகனங்களை நிறுத்தி உங்களைக் கீழே இறக்கி உங்கள் ஆடைகளைக் கிழித்து ஓட ஓட விரட்டி அடிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. கள்ளன் என அழைக்கப்படும், மோசடிக்காரர் என அழைக்கப்படும் ஒருவரை நிதியமைச்சராக்கியதாலேயே நாங்கள் இவ்வளவு கோபமடைந்துள்ளோம்.
நான் பேசுவது எம் அனைவரினதும் பிள்ளைகளுக்காக. ஆகவே என்னைக் கடத்திச்சென்று, அடித்து, என்னைச் சுட்டாலும் எனக்குப் பயமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri