எதிர்க்கட்சியின் முட்டாள்தனமான செயல்கள்! - அமைச்சர் கடும் ஆதங்கம்
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையினரால் மிகுந்த அர்ப்பணிப்புடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையால் மீண்டும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
எதிர்க்கட்சியின் முட்டாள்தனமான செயல்கள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று கூறியதுடன், இன்றைய போராட்டத்தை நடத்துவது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
இன்று மக்கள் வீதிக்கு கொண்டு வந்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளனர் என்றும், இது பெருமைப்பட வேண்டிய சாதனையல்ல, துணிச்சலான செயல் அல்ல என்றும் அமைச்சர் கூறினார்.
நவம்பரில் மீண்டும் கொரோனா நிலைமை வருவதை பொதுமக்களோ அரசாங்கமோ விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
மக்களைப் பற்றி சிந்திக்கவும், மாறாக ஆட்சேபனைகளை எழுப்புவதற்கு ஆக்கப்பூர்வமான வழிகளைப் பயன்படுத்தவும் எதிர்க்கட்சிகளை இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
