பிரித்தானியாவில் மூன்றாவது நாளாகவும் தொடரும் உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம்
இலங்கையில் இனப்படுகொலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இனத்தவருக்குமாக சர்வதேசத்திடம் நீதி கோரி, பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிககைகளை முன்வைத்து, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக அம்பிகை செல்வகுமார் ஆரம்பித்திருக்கும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
கடந்த இரு தினங்கள் போலவே, மும்மத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் அதி உயர் தியாகங்களை புரிந்த,தியாக தீபங்களான அன்னை பூபதி, திலீபன் அவர்களை வணங்கி அம்பிகை செல்வகுமார் இன்றைய தினத்தை தொடர்ந்துள்ளார்.
இன்றைய நாளுக்கான நிகழ்வுகள் மாலை மூன்று மணிக்கு தொடர்ந்து நேரலை மூலம் நடைபெற இருக்கின்றன.
மத தலைவர்களின் ஆசி உரைகள், அம்பிகை செல்வகுமார் அவர்களின் உரை, அரசியல் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் சிறப்புரைகள் மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
தற்போது உள்ள கோவிட் நடைமுறைகள் காரணமாக, உறவுகள் நேரில் சமூகளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன்றைய நிகழ்வுகளை அனைவரும் இணையதளத்தின் (Zoom) வழியாக கலந்து கொள்ளலாம் என்றும் உண்ணாவிரத ஆதரவு குழுவினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை... செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam