70 வருடங்களுக்கு முன்னரும் விமானம் ஒன்றை காவு கொண்ட தமிழகம் நீலகிரி மலை
தமிழகம் நீலிகரி மாவட்ட கோத்தகிரி அருகே 70 வருடங்களுக்கு முன்னரும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகிய தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான டக்லஸ் ரக சி-47பி விமானமே விழுந்து விபத்துக்குள்ளானது.
எனவே நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இந்திய நாட்டின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட்ட 14 பேர் சென்ற எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானமை, இந்த மலைப்பகுதியில் நடந்த 2-வது மோசமான விபத்தாக கருதப்படுகிறது
1950 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதியன்று டக்லஸ் ரக சி-47பி பயணிகள் விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.
எனினும் அடர்ந்த வனப்பகுதி காரணமாக இதில் பயணித்தவர்களின் உடலங்கள் டிசம்பர் 19ஆம் திகதியே மீட்கப்பட்டன.
இந்த மலைப்பகுதியில் நடந்த முதல் விபத்து இதுவாகும்.
இந்த விபத்தில் உலகப் புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் பேராசிரியர் ஏப்ரஹாம் வோல்ட் என்ற புள்ளியியல் வல்லுநர் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்தனர்.
இதன்போது சென்னையிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம், பெங்களூரு, கோவை சென்று இறுதியாக கோவையில் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்தபோது நீலகிரி மலையில் விழுந்து நொறுங்கியது.
நீலகிரி பகுதியில் நிலவிய கடும் பனி மூட்டம் என்பனவே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்திருந்தது.
