பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் பைசர் தடுப்பூசி
16, 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் கோவிட் தடுப்பூசி ஏற்றப்படும் என சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,பாடசாலை மாணவ,மாணவியருக்கு நாளை முதல் பைசர் தடுப்பூசி ஏற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
18 முதல் 19 வயது வரையிலான பாடசாலை மாணவ,மாணவியருக்கு இன்றைய தினம் அவர்களது பாடசாலைகளில் வைத்து பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
16 வயதுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ,மாணவியருக்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்து உரிய ஆலோசனை வழிகாட்டல்கள் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் அதிபர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் எந்த வயதுப் பிரிவினருக்கு எப்போது தடுப்பூசி ஏற்றுவது எந்த பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பது என்பதனை தீர்மானிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
