முதல் குற்றவாளி மகிந்தவே! வெளிப்படுத்தப்பட்ட தகவல்
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய முதல் குற்றவாளி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச என்பதால் அவரை உடனடியாக கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் உள்ளிட்ட அரசு பதவி விலகும் வரை ஐக்கிய மக்கள் சக்தி இனி வரும் காலங்களில் எந்த ஒரு கலந்துரையாடல் அல்லது வேலைத்திட்டங்களுக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
| பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே... நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே - வைரமுத்து நெகிழ்ச்சி |
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri