தடுப்பூசி குறித்து சுவிஸ் அரசு முன்வைத்த திட்டம்! கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிராகரிப்பு
சுவிஸ் மக்களை தடுப்பூசி பெற வைப்பதற்காக பெடரல் அரசு முன்வைத்த திட்டத்தினை அனைத்து சுவிஸ் மாகாணங்களும் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி பெற வேண்டும் என்பதற்காக பெடரல் அரசு திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியிருந்தது.
அதன்படி, தடுப்பூசி பெற தயங்குபவர்களுக்கு விளக்கமளித்து அவர்களை தடுப்பூசி செலுத்த சம்மதிக்க வைப்பவர்களுக்கு 50 சுவிஸ் ஃப்ராங்குகள் வழங்க, பெடரல் அரசு திட்டமிட்டிருந்தது.
இந்த திட்டத்தினை அனைத்து சுவிஸ் மாகாணங்களும் நிராகரித்துள்ளது.
Thurgau மாகாணம் இது கேலி செய்யும் செயல் என்றும், Sankt Gallen, இது அர்த்தமற்ற செயல் என்றும், சூரிச், இப்படி பணம் கொடுப்பது தவறு என்றும், Neuchatel, இது நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டதென்றும் தமது எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்துள்ளன.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
