பேரணி மூலமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வே விசாரணைகளுக்குக் காரணம்

the reason for the investigations is
By Independent Writer Feb 26, 2021 04:19 AM GMT
Report

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் இந்த விசாரணைகள் மூலம் நாங்கள் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. மேற்படி பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கெதிரான விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் சிவில் சமூகங்களின் சம்மேளனத்தால் சட்ட ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களின் சம்மேளன இணைத்தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில் நீதிமன்றக் கட்டளைகளை மீறிச் செயற்பட்டதாகத் தெரிவித்து இன்றையதினம் (23) திருக்கோவில் மற்றும் மட்டக்களப்பு பொலிஸாரினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியை நடாத்தியதாக இன்றைய தினம் மட்டக்களப்பு மற்றும் திருக்கோவில் பொலிஸாரினால் இன்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பேரணி தொடர்பிலான எந்தவொரு பொலிஸ் நிலையத்தாலும் நீதிமன்றத் தடையுத்தரவும் எனது கைக்குக் கிடைக்கவில்லை.

நான் அவர்களிடம் கூறியிருந்தேன் நீதிமன்றத் தடையுத்தரவு வழங்காதவிடத்து நீதிமன்றத்தை அவமதித்ததாக எவ்வாறு என்மீது விசாரணை நடத்துவீர்கள் என்று கேட்டிருந்தேன்.

அதற்கு இப்படியொரு விசாரணை உள்ளது. நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ அதைச் சொல்லுங்கள் என்றுசொன்னார்கள். அதன் பிரகாரம் எனது விளக்கத்தை அவர்களுக்குத் தெரிவித்துள்ளேன்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான இந்தப் பேரணி சட்டத்திற்குப் புறம்பானதுபோலவும், இந்த நாட்டில் பாரியதொரு குற்றம் நடைபெற்றிருப்பது போலவும் கட்டுவதற்காகவும், ஜனநாயக ரீதியில் போராடும் மக்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்துமுகமாவும், ஜனநாயகக் குரல்வளையை நசுக்கும் சம்பவமாகவுமே இந்தவிசாரணைகளை நாங்கள் நோக்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டில் எமது மக்கள் நீண்டகாலமாகப் போராடுகின்ற விடயங்களுக்காகவும், இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நியாயமான விடயங்களில் இந்த அரசு மேற்கொள்ளும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எதிர்த்தும் தான் நாங்கள் இந்தப்போராட்டத்தினை நடத்தினோம்.

அதேபோல் காலாகாலமாகத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற அநீதிகளை எதிர்த்தும், சுயநிர்ணய கோட்பாடுகளை வலியுறுத்தியும், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவைக்கு நாங்கள் அனுப்பியிருக்கின்ற பரிந்துரைகளுக்கு வலு சேர்க்கும் முகமாகவுமே இந்தப் பேரணி நடாத்தப்பட்டது.

இதன் மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் இந்தவிசாரணைகள் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

எத்தனை விசாரணைகள் நடைபெற்றாலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடாத்தப்பட்ட மக்கள் பேரெழுச்சி இயக்கமானது தொடர்ச்சியாக எமது மக்களுக்கான நீதியினைக் கோரும் முகமாக பலதரப்பட்ட செயற்பாடுகளைச் செய்ய இருக்கின்றோம்.

அத்துடன் இவ்வாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது பல விசாரணைகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் நாங்கள் சட்ட வல்லுநர்களுடன் தொடர்பு கொண்டு பல ஆலோசனைகளைப் பெற்றிருக்கின்றோம்.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் சட்ட ஆலோசனை மையத்திற்கான தற்காலிக காரியாலயங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்கன் மிசன் தேவாலய வளாகத்திலும் (தொலைபேசி இலக்கம் 0779661797) யாழ்ப்பாணத்தில் நல்லூர் சிவகுரு ஆதீனத்திலும் (தொலைபேசி இலக்கம் 0778568417) அமைக்கப்பட்டுள்ளன.

எனவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் ஏதேனும் சட்ட நடவடிக்கைகள், வழக்குகள், பொலிஸ் அச்சுறுத்தல்கள், விசாரணைகள் இருப்பின் மேற்சொன்ன விலாசத்தில் அல்லது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நிவாரணமும் பெற்றுக் கொள்ள முடியும்.

பொலிஸார் மூலமாக ஒரு ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் ஒரு அழுத்தத்தைப் பிரயோகித்து அச்ச உணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டினை அரசு மேற்கொள்கின்றது. எனவே இது போன்ற செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US