முறைப்பாட்டை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யான்ஓயா பகுதியில் முறைப்பாடு ஒன்றினை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியதுடன், கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் (09.02.2023) இடம் பெற்றுள்ளது.
யான் ஓயா என்ற கிராமத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மூவர் கைது
குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்யச் சென்ற பொலிஸாரை தாக்கியதுடன், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிடையே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றுமொருவர் தலைமறைவாகியுள்ளார் என ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹொரவ்பொத்தானை- யான் ஓயா பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 27, 28 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தலைமறைவாகிய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
