பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சித்த புலம்பெயர்ந்தோருக்கு நேர்ந்த கதி
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர் படகொன்று நேற்று(14.12.2022) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நான்கு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.
பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்
குறித்த படகில் பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் பயணித்துள்ளமையால், இந்த படகு கவிழ்ந்த சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைய பல நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்கள் பிரான்ஸ் நாட்டிலுள்ள கலாயிஸ் துறைமுகத்துக்கு தெற்கே அமைந்துள்ள Ambleteuse கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம் பிரித்தானியா நோக்கி ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறு படகொன்றில் புறப்பட்டுள்ளார்கள்.
அதிகாலை 1.53மணியளவில், பிரான்சிலுள்ள தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு வாட்ஸ் ஆப் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
படகில் ஏற்பட்ட பிரச்சினை
அந்த படகில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைக்கவே, பிரான்ஸ் தரப்பிலிருந்தும், பிரித்தானிய தரப்பிலிருந்தும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குப் புறப்பட்டுள்ளார்கள்.
சம்பவ இடத்துக்குச் சென்றபோது, படகு ஒன்று தன்ணீரில் கவிழ்ந்து படகிலிருந்தவர்கள் பலர் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருப்பதைக் அதிகாரிகள் கண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் இடம்பெற்றுள்ளன.
அல்பேனியா, ஆப்கானிஸ்தான், ஈராக், செனகல் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அந்தபடகில் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.