கோட்டாபயவை விட அதிகாரத்துடன் செயற்பட்ட அரச அதிகாரிக்கு நேர்ந்த கதி
இலங்கை ஜனாதிபதி ஒருவரின் சம்பளத்தை விட 40 மடங்குக்கும் அதிகமாக பெற்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரசுக்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்து இரண்டு நிறுவனங்களிடமிருந்து சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவாக அவர் மாதத்திற்கு 4 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அவர நீக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்ட நிறுவன தலைவர் மற்றொரு அரச நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் ஒருவருக்கு மாதாந்த சம்பளமாக 97,500 ரூபா சம்பமாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 நிமிடங்கள் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
