தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சிலாபத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்!
பொலநறுவை - கல்லெல்ல என்ற இடத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற சிறைக்கைதி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
சிலாபம்- மாதம்பே பகுதியில் வைத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தப்பிச்சென்ற ஏனைய நான்கு கைதிகளையும் தேடும் பணிகள் தொடர்கின்றன.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இந்த ஐந்து பேரும் இன்று காலை சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பிச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் இவர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் கோரியிருந்தனர்.
இதேவேளை இன்று அதிகாலை சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பிய கைதிகள் கொழும்பை நோக்கிச் சென்ற என்பி 9268 என்ற தனியார் பேருந்திலேயே பயணித்துள்ளனர்.
எனவே இந்த பேருந்தில் பயணித்த ஏனைய பயணிகள் சுயதனிமைப்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறையின் பேச்சாளர் கோரியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

வெறும் 10 வருடங்களில் முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 42 வயது நபர் News Lankasri
