திருகோணமலையில் ஒரே நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சேனை பயிர்ச்செய்கையை அழித்த யானை
திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்ற நிலையில் ரொட்டவெவ கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சேனைப்பயிர்ச் செய்கையை சேதப்படுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
தங்க ஆபரணங்களை அடகு வைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் இரவு பகலாக கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி பல கஷ்டங்களுக்கு மத்தியில் உண்டாக்கி வந்த தென்னங்கன்று மற்றும் சோளம், வாழை மரங்கள் போன்றவற்றை ஒரே நாளில் சேதப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக பல தடவைகள் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தோம். இதுகுறித்து அவர்கள் கவனம் எடுக்கவில்லை எனவும் இதனாலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களது சேதத்தை கவனத்திற்கொண்டு பிரதேச செயலகம் தங்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டுமெனவும் காட்டு யானைகளின் தொல்லைகளை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.