ஜனாதிபதி ரணில் குறித்து எகிப்திய ஜனாதிபதி வெளியிட்டுள்ள நம்பிக்கை
இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ள திறமையில் எகிப்து அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என எகிப்து அரபுக் குடியரசின் ஜனாதிபதி அப்தெல் பத்தா அல் சிசி தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்..
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ள அப்தெல் பத்தா அல் சிசி, இலங்கை மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளின் பொதுவான நலன்களை முன்னெடுப்பதற்கும், இரு நாட்டு நட்பு மக்களுக்கு மிகவும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.