ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது – ஹேசா விதானகே
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் புதிய ஒரு நாடகத்தை ஆரம்பித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்த அறிக்கையில் ஒரு லட்சம் பக்கங்கள் இருந்தாலும் அதில் எத்தனை பக்கங்கள் குறையும் எனச் சொல்ல முடியாது. அரசாங்கத்திற்கு இந்த விசாரணை அறிக்கையை அம்பலப்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் காணப்படுகின்றது.
உண்மையான கொலையாளிகளை அறிவிப்பது அரசாங்கத்திற்குப் பிரச்சினையாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.




