விபத்தை ஏற்படுத்திய சாரதியை பொலிஸார் இதுவரையில் கைது செய்யவில்லை என விசனம்
வவுனியா - குருமன்காடு பகுதியில் கடந்த இரு தினங்களிற்கு முன் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதியை பொலிஸார் இன்னும் கைது செய்யவில்லையென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
கடந்த நான்காம் திகதி இரவு குறித்த பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற இருவரை முச்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார்சைக்கிளில் பயணித்தவர்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய நீல நிற முச்சக்கரவண்டியின் சாரதி குறித்த இடத்தில் நிற்காமல் விபத்தை ஏற்படுத்தியதும் அங்கிருந்து தப்பித்து சென்றதாக காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் இரு தினங்கள் கடந்தும் விபத்தை ஏற்படுத்திய நபரைக் கைது செய்யவில்லையென்று பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டியின் (NP QU - 9554) இலக்கமும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.









மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
