பேராயர் எடுத்துள்ள கடுமையான முடிவு (VIDEO)
கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை(Malcolm Ranjith) நாளைய தினம் நடைபெறவுள்ள அரச சுதந்திர தின வைபவத்தில் கலந்துக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளார்.
கொழும்பு பொரள்ளை நகரில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நிரபராதி ஒருவரை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்துள்ளமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு, பேராயர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அருட்தந்தை சிறில் காமினி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபையினர் கடும் அதிருப்தியையும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சர்வதேசத்திற்கு செல்ல போவதாகவும் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.



