புதிய அரசியலமைப்பின் வரைவு இறுதி செய்யப்பட்டது! - இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழு புதிய அரசியலமைப்பின் வரைவை இறுதி செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (Prof. G.L. Peiris) இதனை தெரிவித்துள்ளார்.
ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா (Romesh de Silva) தலைமையில் நிபுணர்கள் மற்றும் புகழ்பெற்ற சட்டத்தரணிகளை கொண்டு நியமிக்கப்பட்டது.
இந்த குழு புதிய அரசியலமைப்பு வரைவின் முன்மொழிவை முடித்துவிட்டதாகவும், இறுதி ஆவணத்தை தயாரிக்க சட்ட வரைவாளர் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பின் வரைவை சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
அத்துடன், இலங்கை நாடாளுமன்றம் ஜனவரி 2020 இல் புதிய அரசியலமைப்பை நோக்கி கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri