மாவட்ட மருத்துவமனைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகள் உள்ளிட்ட ஒன்பது மருத்துவமனைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்லும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று 14.06.2021 இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையில் தேசிய மருத்துவமனைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனை ஒன்றை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது மாகாண சபைகளால; நிர்வகிக்கப்படுவதும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் நிறுவன வகைப்படுத்தலின் கீழ் காணப்படும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸாவெல, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளின் சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமென இனங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்நோக்கத்தை அடைவதற்காக குறித்தமாவட்ட பொது மருத்துவ மனைகளை
சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சுகாதார
அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது. என தகவல் தெரிவிக்கின்றன.
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam