வீட்டில் எரிபொருளை சேமித்து வைக்கும் மக்களால் அதிகரிக்கும் ஆபத்து
வீட்டில் பெட்ரோலை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலை கையாள்வது இலகுவானது அல்ல எனவும், ஆபத்து மிக அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீக்காயங்களுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அடுப்புகளை பற்றவைக்க மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெட்ரோலைப் பயன்படுத்துவதால் தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கயான் ஏகநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் பெட்ரோலுக்காக வரிசையில் நிற்க வேண்டி ஏற்பட்டுள்ளதால், வாகனங்களுக்கான எரிபொருளை பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.
இந்த செயற்பாட்டின் காரணமாக ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோலை கையாள்வது இலகுவானது அல்ல எனவும், ஆபத்து மிக அதிகம் எனவும் கலாநிதி கயான் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri