பிரித்தானியாவின் தற்போதைய கோவிட் நிலவரம்! வெளியாகியுள்ள அறிவிப்பு
பிரித்தானியாவில் மேலும் 290 கோவிட் -19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 7434 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் கோவிட் - 19 தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.6 மில்லியனாக உயர்ந்துள்ளது.
பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பதிவான நாளாந்த அறிக்கையுடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் கோவிட் - 19 மரணங்கள் மற்றும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122,705 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 19,682,048 பேருக்கு கோவிட் - 19 தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜூலை இறுதிக்குள் பிரித்தானியாவில் வயதுவந்த அனைவருக்குமு் கோவிட் - 19 தடுப்பூசியின் முதல் டோஸை வழங்குவதற்கான இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது.