தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது – ஓமல்பே சோபித தேரர்
தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டியில் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை சட்டவிரோதமானது எனவும் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் 20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஓர் சூழ்ச்சித்திட்டமா என்ற சந்தேகம் எழுகின்றது அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல சட்டத்தரணியான நீதி அமைச்சருக்கு இந்த விடயம் புரியாமல் இருப்பது சந்தேகம் ஏற்படுத்துகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தாது இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் உடன் தீர்வு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்கள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பிலும் சர்ச்சைகள் எழக்கூடிய அபாயம் காணப்படுவதாக சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.