அடுத்த வாரத்திற்குள் நாடு எதிர்நோக்கவுள்ள பெரும் நெருக்கடி - வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் தற்போது ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை 1,000 படுக்கைகளுடன் இடை சிகிச்சை மையங்களை திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் தொற்றுக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி செனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் , அடுத்த வாரத்திற்குள் நாடு ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்குள் 1,000 படுக்கைகளுடன் புதிய இடை சிகிச்சை மையங்களை திறக்கும் சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் கூட இவ்வாறான சூழல் ஏற்பட்டு அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் உருவான போது அந்த நாடுகளின் நோய் தீர்க்கும் துறை எவ்வாறு செயற்பட இயலாத நிலைக்கு சென்றன என்பது தெளிவாகின்றது என்று செனால் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
மருத்துவமனைகளின் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் கோவிட் தொற்றின் தினசரி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த இயலாது. அதிகரித்து வரும் படுக்கைகள் என்றால் சுகாதாரத்துறை அதன் திறனை விரிவுபடுத்துகிறது என்பதே அர்த்தமாகும்.
எனினும் பயிற்சி பெற்ற சுகாதார சேவை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
படுக்கைகளின் எண்களுக்கு இணையாக அதிகரிக்க முடியாது என்று அவர் கூறினார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
