டொலர் நெருக்கடியால் அரச அச்சகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
அரச அச்சகத்தில் அரச புத்தகங்கள் உள்ளிட்ட அச்சிடும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் கடதாசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க அச்சக திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அச்சு கடதாசிகள் அடங்கிய 8 கொள்கலன்கள் டொலர் கிடைக்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் சில காலமாக தேங்கியுள்ளமையினால் இவ்வாறு கடதாசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அரசாங்கத்தின் அச்சிடும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது 6 மாதங்களுக்கு போதுமான அச்சுக் கடதாசிகள் மட்டுமே அரச அச்சகத் திணைக்களத்திடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் அச்சிடும் பணிகளில் பெரும் சிக்கல் நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறித்த திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam