கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
கடந்த அக்டோபர் 26ஆம் திகதியன்று இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று(09.11.2022) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இதனையடுத்து முன்னதாக இலங்கை நீதிமன்றில் விடுவிக்கப்பட்ட மூன்று ஜெகதாப்பட்டினம பகுதி கடற்றொழிலாளர்களுடன் தமிழகம் திரும்புவார்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 7 கடற்றொழிலாளர்களும் நேற்று யாழ்ப்பாணம் ஊர்க்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
10 ஆண்டுகள் சிறை தண்டனை
வழக்கை விசாரித்த நீதிவான், மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டால், கடற்றொழிலாளர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து, அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நவம்பர் 5ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த
மேலும் 15 கடற்றொழிலாளர்கள் தற்போதும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.