இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதி
இலங்கையில் திருமணத்திற்காக சேமித்த 20 லட்சம் ரூபாய் பணத்தை வறுமையில் வாழும் குடும்பம் ஒன்று வீடு கட்டி கொடுத்த தம்பதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை, அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த இளைஞனும் தனது காதலியும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். குறித்த இளைஞன் மக்கள் வங்கியில் பணியாற்றுகின்ற நிலையில் காதலி ஆயுர்வேத வைத்தியராகும்.
தெற்கில் உள்ள பிரபல ஹோட்டலில் இந்த இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு இரண்டு குடும்பத்தினரும் தீர்மானித்திருந்தனர். எனினும் ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக பிரம்மாண்டமாக திருமணம் செய்து பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக வறுமையிலுள்ள குடும்பம் ஒன்றிற்கு உதவுவதற்கு இருவரும் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய கணவனை இழந்த 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு தங்கள் திருமணத்திற்காக சேமித்த பணத்தை கொண்டு இந்த வீட்டை நிர்மாணிக்க அவர்கள் ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டு குறித்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடவுள் மனித வடிவில் இருப்பதனை தற்போதே பார்க்கின்றேன் என வீட்டில் குடியேறிய பெண் தெரிவித்துள்ளார்.


பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam