நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல்! ஊடகத்தின் பொறுப்பு - ஸ்ரீநாத் எம்பி வலியுறுத்து

Batticaloa Sri Lankan Peoples Journalists In Sri Lanka Social Media Ilaiyathambi Srinath
By Rusath Jun 01, 2026 12:29 PM GMT
Report

நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல் ஒன்று போய்க் கொண்டிருக்கின்றது. இவற்றை ஊடகத்தின் ஊடாக கொண்டுவர வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினமும் இளம் ஊடகவியலார்களுக்குரிய பயிற்சியும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(31.05.2026) மட்டக்களப்பில் அமைந்துள்ள ஊடக வள கற்கைகள் நிலையத்தில் நடைபெற்றது.

ஊடக சுதந்திரங்கள்

இதன் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

ஊடக சுதந்திரங்கள் ஒடுக்கப்படுகின்ற நாடுகளாக ஆசிய நாடுகள் மற்றும் கீழைத் தேய நாடுகள் காணப்படுகின்றன.

இந்த விடயத்திலே இவ்வாறானது ஒரு களச் சூழலில் ஊடகவியலாளர்கள் தமது பணியை கடினமானதாக இருந்தாலும் அவர்கள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவையாக கருதி அதனை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல்! ஊடகத்தின் பொறுப்பு - ஸ்ரீநாத் எம்பி வலியுறுத்து | The Country S Dire Economic Situation

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடகப் பணியை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை செவ்வனே செய்து வருகின்றது.

ஊடகப் பணியானது குறிப்பிட்ட ஒரு சிலருடன் நின்று விடாமல் அதனை சமூக மயப்படுத்தப்பட்டு அடுத்த சாந்தினருக்கு எடுத்தியம்பி அது பரந்த அளவிலே செயல்படுத்தப்படுகின்றபோது அதில் ஆரோக்கியமான போட்டித் தன்மையும் சிறந்த விடயங்களும் மக்களுக்குக் கொண்டு செல்லப்படும். இந்த விடயங்களை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் துணிந்து செயல்படுவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

கடந்த காலத்திலேயே இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், இறப்பு என்பது ஊடகவியல் துறைக்கு மாத்திரம் அல்ல பிறக்கின்ற மனிதர் ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும். இறக்கின்ற காலப்பகுதிக்குள் மக்களுக்கு என்ன செய்தியை கொடுத்துவிட்டு செல்லப் போகிறோம் என்பதைப் பற்றித்தான் அவர்களுடைய செயற்பாடுகளில் எதிர்காலத்தில் கூறுவார்கள்.

ஊடகத்துறையில் ஆதிக்கம்

எனவே துன்பத்தைப் பற்றியோ இறப்பை பற்றியோ அஞ்சி நாம் எந்த துறைகளிலும் முன்கொண்டு செல்ல முடியாது.

அந்த அடிப்படையிலே வளர்ந்து வருகின்ற ஊடகவியலாளர்கள் மிக முக்கியமாக ஜனநாயக பண்புகளை பேணுகின்ற ஊடகவியலாளர்களாக மிளிர வேண்டும்.

பக்கச் சார்பற்றதாக மக்களுக்கு சரியான விடையங்களை தெளிவு படுத்துவதாக இருக்க வேண்டும். சமகாலத்தில் ஊடகத்துறையில் ஏற்படுகின்ற தொழில்நுட்ப புரட்சிக்கு ஈடுகொடுக்கக் கூடியவர்களாக ஊடகவியலாளர்கள் மாறவேண்டும். சமூக வலைத்தளங்கள் ஊடகத்துறையில் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றன.

அவற்றை உள்வாங்கிக் கொண்டு அத்துறைகளிலும் ஊடகவியலாளர்கள் முன்னேறிச் செல்லவேண்டும். நாட்டிலேயே ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் மிகப் பிரதானமாக சமூக ஊடகங்களை வைத்துதான் கொண்டுவரப்பட்டிருந்தன.

நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல்! ஊடகத்தின் பொறுப்பு - ஸ்ரீநாத் எம்பி வலியுறுத்து | The Country S Dire Economic Situation

அதேபோல் தமிழகத்திலும் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திலும் மிக முக்கியமாக சமூக ஊடகத்தின் பங்கு அதிகம் காணப்பட்டிருந்தது. எனவே சமகால தகவல் புரட்சியை உள்வாங்கி கொள்கின்றது என்பதை வளர்ந்து வரும் ஊடகவியலாளர்கள் விளங்கிக் கொண்டால் ஊடகத்துறையிலே சிறந்தவர்களாகவும், வலுவுள்ளவர்களாகவும் முன்னோக்கியவர்களாகவும் வரமுடியும்.

தகவல்களைக் கொண்டு சேர்க்கின்ற கடந்த கால நடைமுறைகளிலே பத்திரிகைகள்தான் காணப்படுகின்றன. யுத்த காலத்திலேயே பல பத்திரிகைகளிலே எவ்வாறான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை மிக ஆர்வமாக நாம் வாசிப்போம். இன்று அவை நமது கையடக்கத்திற்கு உள்ளே வந்திருக்கின்றன.

எனவே சமகாலத்தில் ஏற்படுகின்ற இந்த தகவல் தொழில்நுட்பு புரட்சியை உள்வாங்கிக் கொண்டு ஊடகத்துறையை வலுப்படுத்த வேண்டும். நீதியான முறையிலே ஊடகத் தருமத்தை பேணிக் கொள்கின்றபோது ஊடகத்துறையினூடாக மிக பாரியளவு பங்காற்றலாம்.

நெருக்கடியான பொருளாதார சூழல்

ஆனாலும் சமகாலத்தில் பாரிய விமர்சனங்களும் இருக்கின்றன. பக்கச் சார்பாக ஒருவருக்கு தனிப்பட்ட ரீதியான விமர்சனங்களை வைப்பதன் மூலமாக பாதக செயல்களைச் செய்தவர்களையும், முன்னிலைப்படுத்தி ஏதோ அவர்கள் நாட்டுக்கு நன்மை செய்தவர்களாகவும், அவர்களை புனிதர்களாக காட்டுகின்றவர்களாகவும், தற்போதும் சமூக வலைத்தளங்களில் கொண்டு வரப்படுகின்றன.

அதனைப் பார்க்கின்ற இளம் சமூகத்தினர் இவ்வாறான கருத்தியலைத்தான் அவர்களும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆகவே தெளிவான விடயங்களை அலசி ஆராய்ந்து ஊடகத்தின் ஊடாக சரியான விடயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. தவறான விடயங்களை கொடுக்கின்றபோது அவற்றை நம்புகின்ற ஒரு சாராரும் இருக்கின்றார்கள்.

நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல்! ஊடகத்தின் பொறுப்பு - ஸ்ரீநாத் எம்பி வலியுறுத்து | The Country S Dire Economic Situation

எனவே ஊடகத்துறைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கின்றது. ஊடக தர்மத்தை அனுசரித்து அவற்றை முன்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உண்டு உள்ளது. நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல் ஒன்று போய்க் கொண்டிருக்கின்றது.

இவற்றை ஊடகத்தின் ஊடாக கொண்டுவர வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது. நிலக்கரியில் ஏற்பட்ட விடையங்களைக்கூட ஊடகங்களின் ஊடாகத்தான் மக்களுக்கு சரியான செய்திகள் கொண்டு செல்லப்பட்டன.

அரசாங்கம் நல்ல விடையங்களைச் செய்தால் அவற்றை சபரியான முறையில் கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை. தமிழ் மொழி பேசுபவர்களுக்கு அப்பால் பல சகோதர மொழி ஊடகவியலாளர்களும் தமிழ் மக்களுக்காக அல்லது நீதியான போராட்டங்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார்கள்.

ஆகவே இந்த விடயங்களில் எல்லா ஊடகவியலாளர்களையும் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும், பயணித்தவர்களை நினைவு கூர்ந்தவர்களாக ஊடகப்பயணத்தை தொடர்வோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US