நாடு பஞ்சத்தின் விளிம்பில் (Video)
எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்படும் நிலையை தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார(Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த முட்டாள்தனமான முடிவுகளால் மக்களுக்கு தேவையான உரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. இப்போது மரக்கறிகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்த நாட்டை அரசாங்கம் பஞ்ச நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அரிசி வர்த்தமானியை மீளப்பெற்றது. சீனி வர்த்தமானியை மீறப் பெற்றது. இன்று உரம் தொடர்பான வர்த்தமானியை மீளப் பெற்றுள்ளது.
நெல் அறுவடை குறைக்கப்பட்டு, இந்த அரசாங்கம் இந்த நாட்டை பஞ்சத்தின் நிலைக்கு கொண்டு வந்துள்ளது என அவர் கடுமையாக சாடியுள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
