கொழும்பு தேசிய மருத்துவமனைக்குள் திடீரென நுழைந்த நாகப்பாம்பு
கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து சிகிச்சை அறைக்குள் திடீரென ஒரு நாகப்பாம்பு வந்ததால் அனைத்து ஊழியர்களும், நோயாளிகளும் அச்சமடைந்துள்ளனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தலைமை செவிலியர் புஷ்பா ரம்யானி டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகாரிகள், எவரையும் தீண்டுவதற்கு முன்னர் நாகப்பாம்பைப் பிடித்தனர். இதன்பின்னர் போத்தல் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அந்த பாம்பு, சுவாசிக்க எளிதாக்க போத்தலில் ஒரு துளை இடப்பட்டது.
இந்த நிலையில் விலங்குகள் சம்பந்தப்பட்ட இடங்களை தொடர்பு கொண்ட போதும் எவரும் வரவில்லை, இறுதியில் நண்பர் நாகத்தை கொழும்பிலிருந்து தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விடுவதற்கு இணங்கியதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் தலைமை செவிலியர் புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் பூனைகள் மற்றும் பல விலங்குகள் இதற்கு முன்னர் வந்தாலும் , ஒரு சிகிச்சை அறைக்குள் நாகப்பாம்பு வந்தது இதுவே முதல் முறை என்று அவர் கூறியுள்ளார்.







ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
