இலங்கையின் ஆடைத்துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை ஆடைத் தொழில்துறை தொடர்ந்தும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை மட்டும் தங்கியிருப்பது பெரும் ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆடை உற்பத்தித் தொழில்துறையின் உயர்மட்ட அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் தலைவர் பீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆடை ஏற்றுமதி
இலங்கை தற்போது ஈட்டி வரும் ஆடை ஏற்றுமதி வருமானத்திற்கும், நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கிற்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது.

இதனை நிவர்த்தி செய்ய தற்காலிக தீர்வுகளை விட திட்டமிடப்பட்ட கொள்கை மாற்றங்கள் அவசியமாகும். ஆடைத் தொழில்துறையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதன் மூலமே 8 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடைய முடியும்.
2025 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, ஆடை ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சற்றே தாண்டியுள்ளது.
உலகளாவிய சூழலில் இது ஒரு சாதகமான செயற்பாடாக இருந்தாலும், எதிர்பார்க்கும் இலக்கை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
8 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு என்பது வெறும் செய்தித்தாள் தலைப்பாக மட்டும் இருக்கக்கூடாது. அது தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக மாற வேண்டும்.
ஏற்றுமதி இலக்கு
இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய மூன்று சந்தைகளில் இருந்தே கிடைக்கின்றது.

இலங்கை உலகளாவிய சந்தையை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த மூன்று சந்தைகளும் சேர்ந்து இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாயில் சுமார் 85 சதவீதத்தைக் கொண்டுள்ளன என்றும் அந்த அறிக்கை கூறியது.
இந்தச் சந்தைகளில் நுகர்வோர் தேவை குறையும் போது, சுங்க வரிக் கொள்கைகள் மாறும்போது, சட்ட மற்றும் இணக்க விதிமுறைகள் கடுமையாக்கப்படும் போது, அல்லது வர்த்தக முத்திரைகள் தங்கள் விநியோக முறைகளை மாற்றும்போது, அதன் தாக்கம் நமது முழுத் தொழில்துறையிலும் எதிரொலிக்கும்.
8 பில்லியன் அமெரிக்க டொலர் ஆடை ஏற்றுமதி இலக்கை அடைவதற்கு, தற்போதைய சந்தை நிலவரங்களை மட்டும் நம்பியிருப்பது போதாது என்பதையும், இலங்கை இதுவரை அணுகாத சந்தைகளை எட்டுவதற்கு நாட்டின் ஆடைத் துறை ஒரு வலுவான ஏற்றுமதி அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam