பரபரப்பாக காணப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரிய அளவிலான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றமையே அதற்கு காரணமாகும்.
வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்
அதற்கமைய, அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதுடன், மாணவர்கள் கல்வி கற்க வெளிநாடுகளை நோக்கி செல்லும் நடவடிக்கைகளும் இந்த நாட்களில் அதிகரித்துள்ளது.
மறுபுறும் தங்கள் பிரஜைகளை வெளிநாடுகள் மீண்டும் அழைப்பதனால், சுற்றுலாப் பயணிகள் நாட்டைவிட்டு வெளியேறும் செயல்பாடுகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனாலும் விமான நிலையம் பரபரப்பாக இயங்குவதாகவும் மக்கள் பாரிய அளவில் குவிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பரபரப்பு குறையும் உள்வருகை முனையம்
எப்படியிருப்பினும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்வரும் நுழைவு முனையம் அவ்வளவு பரபரப்பாக இல்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியினால் இலங்கைக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
