டீசலின்றி நடுவீதியில் நின்ற பேருந்து! மக்கள் பெருந் தவிப்பு
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று டீசல் இன்றி வீதியில் நின்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை களுத்துறை நகர மையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மாத்தறை இலங்கை பேருந்து போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து களுத்துறை வீதியில் காலை 9 மணியளவில் நின்றுள்ளது.
அப்போது பேருந்தில் சுமார் 80 பயணிகள் பயணித்ததால் அவர்கள் வேறு பேருந்துகளில் ஏற்றி அனுப்ப நேரிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் களுத்துறை இலங்கை போக்குவரத்து சபைக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து டீசல் கொண்டு வரப்பட்டு மீண்டும் 10.30 மணியளவில் பேருந்து மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
