கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள பௌத்த சமுதாயத்தின் இருப்பு! - ஞானசார தேரர்
இஸ்லாமிய அடிப்படைவாதத்தினாலும், கிறிஸ்தவ சபைகளின் அடிப்படைவாதத்தினாலும் பௌத்த சமுதாயத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.
அத்துடன், சிங்கள பௌத்தர்கள் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு மகாநாயக்க தேரர்களுக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபலசேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் சுதந்திர சதுக்கத்தில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல தகவல்களை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,