பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குண்டு வெடிப்பு! - வெளியாகியுள்ள முக்கிய தகவல்
பிரித்தானியாவின் - லிவர்பூல் வைத்தியசாலைக்கு அருகில் குண்டுவைத்த நபர் குறித்து புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளான.
Emad Jamil Al Swealmeen (32) என்னும் நபர், லிவர்பூல் பெண்கள் வைத்தியசாலைக்கு அருகே ஒரு வாடகை காரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தார்.
அவர் வெடிகுண்டு வைக்க முயலும்போது தவறுதலாக குண்டு வெடித்து இறந்தாரா அல்லது அவர் தற்கொலைகுண்டுதாரியா என்பதைக் கண்டறியும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தான் சிரியா மற்றும் ஈராக் பின்னணிகொண்டவன் என Emad தன் நண்பர்களிடம் கூறியுள்ள நிலையில், அவர் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மிக பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இரும்புக் குண்டுகள் நிரப்பிய 'Mother of Satan' என்னும் வெடிகுண்டை Emad, தானே தயாரித்திருக்கிறார். அவ்வகைக் குண்டுகள், ஐஎஸ் தீவிரவாதிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகளாகும்.
இதற்கிடையில், பலமுறை பிரித்தானியாவில் புகலிடம் கோரி Emad அளித்த விண்ணப்பங்கள் உள்துறை அலுவலகத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, தனது புகலிடக்கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த Emad தாக்குதல் நடத்திருக்கலாம் என கருதப்படுவதாக பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.