ஹட்டனில் நீரோடையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்
ஹட்டனில் இருந்து மகாவலி கங்கைக்கு தண்ணீர் செல்லும் ஹட்டன் ஓயா நீரோடையில் காணப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஷெனன் ஃபுருட்ஹில் தேயிலை தோட்டத்திற்கு அருகில் ஓடும் ஹட்டன் ஓயா நீரோடையில் இந்த சடலம் காணப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு சென்ற ஹட்டன் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க இந்த பெண்ணின் உடல் சில தினங்களாக நீரோடையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. சடலம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.



