திருகோணமலையில் தீக்காயங்களுடன் பெண் ஒருவர் சடலமாக மீட்பு
திருகோணமலை - நாச்சிக்குடா பிரதேசத்தில் தீப்பற்றிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - சீனக்குடா நாச்சிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது அபுசாலி
பசீலா (வயது - 80) எனும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு முதல் குறித்த பெண்ணின் நடமாட்டம் இல்லாததையடுத்து அயலவர்கள் வீட்டை சோதனையிட்ட போது அப்பெண் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து நேற்றிரவு வேளை மின்சாரம் தடைப்பட்டபோது மண்ணெண்ணை குப்பி விளக்கு கவிழ்ந்து பெண்ணின் உடம்பில் தீ பரவி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan