மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பிறந்துரைச்சேனையைச் சேர்ந்த 60 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான முஹமது முஸ்தபா செய்யது ஹமீட் என்பவரே இவ்வாறு இன்று (17) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டின் அறையில் நித்திரைக்குச் சென்றவர் இன்று மாலையாகியும் அறையிலிருந்து வெளியே வராததையடுத்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
