நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன் - நீங்கள் மிகப்பெரும் தவறை செய்கிறீர்கள்! சீற்றமடைந்த மகிந்த
அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு என பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இதனால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறி அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு கதவுகள் திறந்தே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மேல் நோக்கி பார்த்து எச்சில் துப்புவதை போன்றது.
அதேபோல் ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் அரசியலுக்கு ஆயுள் குறைவு. நான் 50 வருடங்களாக அரசியலில் அனுபவங்களை பெற்றுள்ளேன்.
எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் கொள்கைகளில் இருந்து விலகிச் சென்றதில்லை எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
கொழும்பில் வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்