கொழும்புக்கு வெளியில் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மிகப் பெரிய இராப்போசன விருந்து
கொழும்புக்கு வெளியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரம் ஒன்றில் இன்றிரவு விசேடமான இராப்போசன விருந்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த இராப்போசன விருந்து கொரோனா நோய் பரவலுக்கு பின்னர் நாட்டில் நடத்தப்படும் மிகப் பெரிய இராபோசன விருந்து என கூறப்படுகிறது.
இந்த விருந்தில் கலந்துகொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் 76 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் கூட்டத்தை நடத்தியது. அந்த பேரணி மற்றும் கூட்டம் என்பன நடைபெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஒன்றுக்கூடல், விருந்துகளை நடத்துதல் மற்றும் வைபவங்களை நடத்துவதற்கு வரையறைகளை விதித்து விசேட சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
