இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வரும் தடை - மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இலங்கையில் வைபவங்கள் மற்றும் சமூக ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
உணவகங்களின் கொள்ளளவில் 50 வீதத்திற்கு உட்பட்டவர்களே அமர முடியும். இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுவோர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர்
இதேவேளை நாளை நள்ளிரவு முதல் வீடுகளில் அல்லது மண்டபங்களில் திருமண வைபவங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறுஅறிவித்தல் வரை இந்தத் தடையும் அமுலில் இருக்கும் என கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
