அங்கம்பொர தற்காப்புக் கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும்! - அமைச்சர் நாமல்
காலனித்துவ காலத்திலிருந்து 202 ஆண்டுகளாக இருந்த இலங்கைக்கே உரித்தான அங்கம்பொர தற்காப்புக் கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தடை நீக்கப்பட்ட பின்னர் அங்கம்பொர தற்பாதுகாப்பு கலையானது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஒரு தேசிய விளையாட்டாக பிரபலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், இந்நாட்டின் பாரம்பரிய அங்கம்பொர தற்காப்பு கலை, 1818 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலனித்துவக் காலத்தில் ஆங்கிலேயர்களால் தடைசெய்யப்பட்டது.
அத்துடன், அங்கம்பொர தற்காப்புக் கலைகளை கற்பிக்கும் திறமையானவர்களைக் கண்டுபிடித்து தேசிய அளவில் விளையாட்டைப் பயிற்றுவிப்பதற்கான பயிற்சி நிலையமொன்றை நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri